< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்
|31 Aug 2023 10:49 PM IST
ரூ.9 ஆயிரம் பென்சன் வழங்க கோரி ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனாக ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரெயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர்கள் 100 அடி ரோட்டில் உள்ள வருங்கால வைப்புநிதி ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவுக்கு புதுச்சேரி வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் நலச்சங்க கவுரவ தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் ஆலோசகர் நடராஜன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ராமலிங்கம், வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.