< Back
புதுச்சேரி
8 ஆட்டோக்களுக்கு அபராதம்
புதுச்சேரி

8 ஆட்டோக்களுக்கு அபராதம்

தினத்தந்தி
|
4 July 2023 10:35 PM IST

புதுவையில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற 8 ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி

புதுவையில் சமீபத்தில் தனியார் பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ பஸ் மீது மோதியதில் மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆட்டோக்களில் 3 முதல் 5 மாணவர்கள் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும என்றும் அரசு அறிவுறுத்தி இருந்தது. இதை மீறி அதிகளவு மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் அவ்வப்போது ஆட்டோக்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இன்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் முக்கிய வீதிகளில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற 8 ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த சோதனையை நாளையும் (புதன்கிழமை) தொடர்ந்து நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்