< Back
புதுச்சேரி
விதிமுறைகளை மீறிய 100 பேருக்கு அபராதம்
புதுச்சேரி

விதிமுறைகளை மீறிய 100 பேருக்கு அபராதம்

தினத்தந்தி
|
1 July 2023 10:50 PM IST

புதுவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிய 100 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி

புதுவைக்கு வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். இவர்களை குறி வைத்து வாடகை வாகன நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து அவர்கள் 2 சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றுலா இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்கள். அப்போது அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து விடுமுறை நாளான இன்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் போலீசார் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் சோதனை நடத்தினர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக வேகமாக வாகனங்களை ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் இருந்தது, ஒருவழிப்பாதையில் சென்றது, உரிய ஆவணங்களின்றி வாகனம் ஓட்டுவது என பல்வேறு காரணங்களுக்காக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர்.


மேலும் செய்திகள்