< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பாண்லே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
|31 Aug 2023 10:05 PM IST
புதுவையில் பாண்லே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு பொனது.
மூலக்குளம்
புதுச்சேரி வடக்கு பாரதிபுரம் சத்தியமூர்த்தி வீதியைச் சேர்ந்தவர் பாலா சுப்பிரமணி (வயது 32). இவர் குரும்பாபேட்டில் பாண்லே பால்பண்ணையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மதுபான கடைக்கு மது வாங்க சென்றார். மது வாங்கி விட்டு திரும்பி வந்துபார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.