< Back
புதுச்சேரி
ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன
புதுச்சேரி

ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன

தினத்தந்தி
|
22 Sept 2023 10:44 PM IST

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.

பாகூர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இருவார தூய்மை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் பாகூர் கஸ்தூரிபாய் காந்தி பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பாகூர் ஏரிக்கரையில் பனை மர விதைகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் கொம்யூன் உதவி பொறியாளர் லோகநாதன், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் பிரதீப்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் பிள்ளையார்குப்பம் சாலையோரம் தூய்மை பணி மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை வலியுறுத்தி பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்தில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்