< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
|19 Jan 2023 9:50 PM IST
புதுச்சேரி பாரதி பூங்காவில் தேர்தல் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு புதுவை தேர்தல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன்படி பாரதி பூங்காவில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நேற்று நடந்தது. இதில் 250 அடி நீளமுள்ள வெள்ளைநிற பேனரில் புதுவையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கற்பனைக்கு ஏற்ப விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஓவியங்கள் வருகிற 25-ந்தேதி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெறும் தேசிய வாக்காளர் தினவிழாவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. விழாவில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார்.