< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
|7 Oct 2023 11:39 PM IST
முத்தியால்பேட்டை அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுச்சேரி
முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது40). பெயிண்டர். இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருந்தது. இதற்காக அவர், புதுவையை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பத்தில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். தற்போது வீடுதிரும்பிய பின்னரும் மதுகுடித்து வந்ததாக தெரிகிறது. மது பழக்கத்தை கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த ஜோதீஸ்வரன் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.