பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
|வில்லியனூர் அருகே தீராத நோயால் விரக்தி அடைந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும். 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோயால் முருகன் பாதிக்கப்பட்டார். இதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முருகனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, கோமதி தனியார் கம்பெனி வேலைக்கு சென்றுவிட்டார். அன்று மாலை மனைவிக்கு போன் செய்த முருகன், ஆஸ்பத்திரியில் இருந்து தன்னை டிஸ்ஜார்ஜ் செய்துவிட்டதாக போனில் தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.
இந்தநிலையில் வேலை முடிந்து கோமதி வீட்டுக்கு வந்தபோது, ஒரு அறையில் முருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். தீராத நோயால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. முருகன் சாவு குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.