< Back
புதுச்சேரி
போக்சோ வழக்கில் பெயிண்டருக்கு 2½ ஆண்டு சிறை
புதுச்சேரி

போக்சோ வழக்கில் பெயிண்டருக்கு 2½ ஆண்டு சிறை

தினத்தந்தி
|
18 Aug 2023 10:15 PM IST

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண் டருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி புதுவை கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுச்சேரி

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண் டருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி புதுவை கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் பலாத்கார முயற்சி

புதுவை திருக்கனூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). பெயிண்டர். இவர் கடந்த 2020-ல் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சவுக்கு தோப்புக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி கையை கட்டி பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார்.

சிறுமி கூச்சலிட்டதால் அவர் சிறுமியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இருந்தபோதிலும் இரவு முழுவதும் அந்த சிறுமி சவுக்கு தோப்பிலேயே இருந்துள்ளார். காலையில் அங்கு சென்றவர்கள் அவரை மீட்டனர்.

சிறை தண்டனை

இது குறித்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சோபனா தேவி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் குற்றவாளி கார்த்திக்கிற்கு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக 2½ வருடமும், மானபங்கம் செய்ததற்காக 2½ வருடமும், கட்டி வைத்ததற்காக ஒரு வருடமும், தடுத்து நிறுத்தியதற்காக 1 மாதம் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்