< Back
புதுச்சேரி
பெயிண்டர் தற்கொலை
புதுச்சேரி

பெயிண்டர் தற்கொலை

தினத்தந்தி
|
22 Oct 2023 10:04 PM IST

புதுவை ரெட்டியார்பாளையம் பெயிண்டர் தற்கொலை செய்துக்கொண்டார்.

மூலக்குளம்

புதுவை ரெட்டியார்பாளையம் அடுத்த மேரி உழவர்கரையை சேர்ந்தவர் ஜான் டேவிட் (வயது 26), பெயிண்டர். இவரும், ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த அபிராமி என்பவரும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்தநிலையில் ஜான்டேவிட்டின் குடிப்பழக்கத்தால் அவரக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அபிராமி கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து சென்று, அப்பகுதியில் உள்ள தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இதனால் ஜான்டேவிட் மனவேதனையில் இருந்துவந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் விரைந்து வந்து ஜான்டேவிட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்