< Back
புதுச்சேரி
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை
புதுச்சேரி

வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை

தினத்தந்தி
|
14 Oct 2023 9:54 PM IST

வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தை கடந்த 1977-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புயல் தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனால் புதுச்சேரிக்கு பேரழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதையொட்டி பொதுமக்கள் வில்லியனூர் மாதா ஆலயத்துக்கு சென்று புயலில் இருந்து தங்களை காப்பற்ற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் புயல் வேறு திசைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பொதுமக்கள் பரிகார பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு 45-வது ஆண்டு பரிகார பாதயாத்திரை புதுவை மிஷின் வீதி ஜென்ம ராக்கினி ஆலயத்திலிருந்து இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த பாதயாத்திரை புஸ்சி வீதி, மறைமலை சாலை, ரெட்டியார்பாளையம், மூலக்குளம் வழியாக வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்