< Back
புதுச்சேரி
வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணை
புதுச்சேரி

வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணை

தினத்தந்தி
|
12 July 2023 11:17 PM IST

வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து இதற்காக இதுவரை ரூ.2 கோடியே 24 லட்சம் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த 17 பயனாளிகள் மானியத்தில் எந்திரங்கள், உபகரணங்கள் வாங்க இதுவரை ரூ.28 லட்சத்து 66 ஆயிரத்துக்கு ஆணை வழங்கப்பட்டது. தற்போது 11 விவசாயிகள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்