< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
|16 Jun 2023 9:38 PM IST
புதுவை கால்நடை மருத்துவக்கல்லூரியில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளில் பணியின்போது இறந்தவர்களுக்கு வாரிசு வேலை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சி ,இன்று நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2 பேருக்கு வாரிசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.