< Back
புதுச்சேரி
லாஸ்பேட்டையில் வாரச்சந்தை தொடக்கம்
புதுச்சேரி

லாஸ்பேட்டையில் வாரச்சந்தை தொடக்கம்

தினத்தந்தி
|
27 Sept 2023 11:34 PM IST

புதுவையில் லாஸ்பேட்டை பகுதியில் இன்றுமுதல் புதன்கிழமைகளில் வாரச்சந்தை தொடர்ந்து நடக்கவிருக்கிறது.

லாஸ்பேட்டை

புதுவையில் தற்போது மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், ஆடு, மாடு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் தற்போது லாஸ்பேட்டை பகுதியில் புதன்கிழமை வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை, நாவற்குளம், சாமிப்பிள்ளைதோட்டம், இடையஞ்சாவடி ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோடு அய்யனார் கோவில் அருகில் இந்த வாரச்சந்தை இன்று தொடங்கப்பட்டது.

வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த வாரச்சந்தை செயல்படும். இங்கு காய்கறிகள், பழங்கள், பாத்திரங்கள் இன்று விற்பனை செய்யப்பட்டன. இதற்காக 30 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வருங்காலங்களில் இந்த கடைகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்