மனநல ஆலோசனை மையம் திறப்பு
|புதுவையில் காலாப்பட்டு மத்திய சிறையில் மனநல ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
காலாப்பட்டு
காலாப்பட்டு மத்திய சிறையில் மனநல ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகள்
புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 350-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிறைத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிறை வளாகத்திலேயே இயற்கை விவசாயம், மூலிகை செடிகள், பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மனநல ஆலோசனை மையம்
இந்தநிலையில் கைதிகளின் மன அழுத்தத்தை போக்கிட மனநல ஆலோசனை வழங்க தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறையில் மனநல ஆலோசனை மையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து சிறையில் ஊழியர்கள் மற்றும் கைதிகளின் மனஅழுத்தத்தை போக்கிட மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டது. இதனை ஆரோவில் பவுண்டேசன் செயலாளர் ஜெயந்தி ரவி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக வளாக இயக்குனர் நந்தகுமார் பூஜம், சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.