< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்
|15 March 2023 10:44 PM IST
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தின் போது மத்திய அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது
புதுச்சேரி
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பாஸ்கர் எம்.எல்.ஏ. (என்.ஆர்.காங்) எழுப்பிய பிரச்சினை வருமாறு:-
பணம் வைத்து சூதாடுவது என்பது குற்றமாகும். இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டம் என்பது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் இதற்கு அடிமையாகி உள்ளனர்.
இளைஞர்களை சீரழிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு பாஸ்கர் எம்.எல்.ஏ. பேசினார்.