< Back
புதுச்சேரி
கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை
புதுச்சேரி

கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை

தினத்தந்தி
|
22 Jun 2023 10:09 PM IST

புதுவையில் சகோதரி மற்றும் பாட்டியை கொல்ல முயற்சி செய்த கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லாஸ்பேட்டை

லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி என்ற அய்யப்பன் (வயது28). கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு சொத்து பிரச்சினை காரணமாக தனது சகோதரி விமலா, பாட்டி கர்ணகி ஆகியோரை கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜூ ஆஜரானார்.

மேலும் செய்திகள்