< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வாகனம் மோதி ஒருவர் பலி
|30 July 2023 10:02 PM IST
தவளக்குப்பத்தில் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
பாகூர்
தவளக்குப்பத்தில் புதுச்சேரி - கடலூர் சாலையோரம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தகாயங்களுடன் கிடந்தார். இதுபற்றி அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.