< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாகியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
|29 Aug 2023 10:22 PM IST
மாகியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.
மாகி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநிலம் மாகி தீரம் சம்ஸ்காரிக்கா வேதி அமைப்பின் சார்பில் 11-ம் ஆண்டு விழா மற்றும் ஓணகோஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுவை சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு, ஓணம் பண்டிகையையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் பரம்பத் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.