< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
|26 Dec 2022 9:07 PM IST
மூலக்குளம் அருகே நோய் கொடுமையால் விரக்தியில் இருந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையத்தை அடுத்த சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 73). இவர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் கொடுமையால் அவர் விரக்தியில் இருந்துவந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருணாநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மகன் குமார் மேட்டுப்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.