செவிலியர்கள் தர்ணா போராட்டம்
|புதுவை செயின்ட் தாழ் வீதியில் செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுவை செயின்ட் தாழ் வீதியில் தர்ணா போராட்டம் இன்று மாலை நடந்தது. போராட்டத்திற்கு சங்க தலைவி சுனீலாகுமாரி தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். என்.எச்.எம். மற்றும் கொரோனா ஒப்பந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.