< Back
புதுச்சேரி
21 ஆசிரியர்களுக்கு விருதுகள் அறிவிப்பு
புதுச்சேரி

21 ஆசிரியர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Sept 2023 10:32 PM IST

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 21 ஆசிரியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 21 ஆசிரியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் விருது

ஆசிரியர்கள் தினம் வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை மாநில அளவில் நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி தொடக்கப்பள்ளி அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை நாவர்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெருமாள், காரைக்கால் கண்ணாப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் பெறுகின்றனர். பட்டதாரி ஆசிரியர்களில் பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்வடிவு, இந்திராநகர் இந்திராகாந்தி அரசுமேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் கந்தசாமி ஆகியோர் பெறுகின்றனர்.

முதல்-அமைச்சர் விருது

முதல்-அமைச்சரின் சிறப்பு விருதுகளை கொடாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (மொழியாசிரியர்) மோகன்ராஜ், கீழ அக்ரகாரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருள்மொழி, சாரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, லாஸ்பேட்டை கோலக்கார ரங்கசாமி நாயகர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இந்துமதி, பாக்குமுடையான்பட்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்கோஸ் தெரேஸ் சுதா ஆகியோர் பெறுகின்றனர்.

தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருதை கொம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பச்சையப்பனும், கலவைக்கல்லூரி அரசுப்பள்ளி பிரெஞ்சு ஆசிரியர் ராஜன் ஜார்ஜ் ஆகியோர் பெறுகின்றனர்.

கல்வி அமைச்சர் விருது

கல்வி அமைச்சரின் வட்டார விருதுகளை இந்திராநகர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா கிருஷ்ணா பிரசாத், சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வாஞ்சிநாதன், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் துரை, காலாப்பட்டுகுப்பம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆனந்தி, லிங்காரெட்டிப்பாளையம் பான்கோஸ் பள்ளி ஆசிரியர் சிவபெருமாள் ஆகியோரும் பெறுகின்றனர்.

காரைக்காலில் வரிச்சிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கரிகாலன், கோட்டுச்சேரி வ.உ.சி. பள்ளி துணை முதல்வர் கனகராஜ்ஆகியோரும், மாகியில் ஐ.கே.குமரன் அரசு உயர்நிலைப்பள்ளி விரிவுரையாளர் ரஷிதாவும், ஏனாமில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புலுசு சாய் ஜானகியும் பெறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக 21 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்