< Back
புதுச்சேரி
வடமாநில தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி

வடமாநில தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
28 July 2023 11:43 PM IST

பாகூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செ்ய்துக்கொண்டார்.

பாகூர்

பாகூர் ராமநாயக்கர் நகரச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53) குடியிருப்புபாளையத்தில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலுகுமார் (வயது 25) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு லாலுகுமார் தன்னுடைய குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் பேசி உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் அங்குள்ள ஷெட்டில் லாலுகுமார் தூக்கில் பிணமாக தொங்கினாா். தகவல் கிடைத்ததும் பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்