< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|14 Jun 2023 11:13 PM IST
கோரிமேடு அருகே கணவர் சரியாக கவனிக்காததால் வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோரிமேடு
மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் பகுதியை சேர்ந்தவர் கோபால் தாஸ் (வயது 62). புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். எனவே இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சசிதாஸ் (52) மற்றும் குழந்தைகளுடன் புதுவையில் தங்கியிருந்து, ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சசிதாஸ் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை கோபால் தாஸ் சரியாக கவனிக்கவில்லை என அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.