< Back
புதுச்சேரி
புதுச்சேரி
செயல்படாத போக்குவரத்து சிக்னல்
|22 Aug 2023 10:33 PM IST
தவளக்குப்பத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பத்தில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் உள்ளது. இதில் அபிஷேகப்பாக்கம் சந்திப்பில் உள்ள சிக்னல் கம்பத்தில் லாரி மோதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்துள்ளது. இதனால் ஒரு சிக்னல் விளக்கு மட்டும் கீழே விழுந்து விட்டது. அதனை பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு மேலாக அந்த விளக்கை மீண்டும் பொருத்தாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள சிக்னல் சரிவர தெரிவதில்லை என்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.