< Back
புதுச்சேரி
2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினத்தந்தி
|
24 Oct 2023 8:27 PM IST

காரைக்கால், புதுச்சோியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காரைக்கால்

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று, வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும். எனவே மீனவர்கள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கடலோர கிராமங்களில் லேசான முதல் பலமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்