< Back
புதுச்சேரி
புதுச்சேரி
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
|22 Dec 2022 10:12 PM IST
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1 - ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி
தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மெற்கு தென்மேற்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை புதுவை, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.