< Back
புதுச்சேரி
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினத்தந்தி
|
22 Oct 2022 10:37 PM IST

புதுச்சோியில் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் இன்று ஏற்றப்பட்டது.

புதுச்சேரி

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மறுநாள் (திங்கட்கிழமை) புயலாக உருவாகிறது. இதனால் தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்