< Back
புதுச்சேரி
புதுச்சேரி
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
|10 May 2023 9:38 PM IST
புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி
அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் புதுவையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதையொட்டி புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.