< Back
புதுச்சேரி
நிரவி-திரு.பட்டினம் தொகுதியில் நலத்திட்ட உதவி
புதுச்சேரி

நிரவி-திரு.பட்டினம் தொகுதியில் நலத்திட்ட உதவி

தினத்தந்தி
|
5 Aug 2023 10:30 PM IST

முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி நிரவி-திரு.பட்டினம் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை: அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.

நிரவி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி, நிரவி-திருபட்டினம் தொகுதி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திரு.பட்டினம் மண்டலீஸ்வரர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் நடைபெற்றது. விழாவிற்கு, அகிலஇந்திய என்.ஆர். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ஜி.விஜயக்குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து, புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, 500 பேருக்கு இனிப்பு, அன்னதானம், மரக்கன்றுகள் மற்றும் 50 பேருக்கு சிகப்புநிற ரேஷன்கார்டுகளை வழங்கினார்.

மேலும், வடகட்டளை, வடக்கு வாஞ்சூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், இனிப்புகளை என்.ஜி.விஜயக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு வாஞ்சூர் பாஸ்கரன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்