< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டை முன்னிட்டு களைகட்டும் கொண்டாட்டம்; குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
|31 Dec 2023 9:47 PM IST
புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
உலக மக்கள் அனைவரும் 2024 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. குறிப்பாக புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டை வரவேற்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடற்கரை சாலையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரை சாலை நோக்கி படையெடுத்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுள்ளது.