புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
|தவளக்குப்பத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிநடைப்பெற்று வருகிறது.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் பகுதியில் மின்பற்றக்குறையால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தானாம்பாளையம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து மின் இணைப்பு 19 மணி நேரத்திற்கு மேலாக தடைப்பட்டது. இதனால் அம்மா நகர், அங்காளம்மன் நகர், மகாலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், தாமரைக் குளம் பகுதி, ராஜீவ் காந்தி நகர், சீனிவாசா நகர், இளவரசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
அதற்கு பதிலாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்ததால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது உத்தரவால் தவளக்குப்பம் பகுதியில் உள்ள லக்கம் அவென்யூ பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடித்து மின் இணைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.