< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதிய பள்ளி வகுப்பறை
|16 Jun 2023 10:22 PM IST
மேல காசாகுடி கிராமத்தில் புதிய பள்ளி வகுப்பறையை அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார்
நெடுங்காடு
நெடுங்காடு அடுத்த மேல காசாகுடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பொதுப்பணி துறை சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.
புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளை, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார். மேலும் பள்ளியில் படிக்கும் 103 மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை, தையல் கூலி மற்றும் இலவச நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.