< Back
புதுச்சேரி
புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகள் - முதல்-மந்திரி ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி

புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகள் - முதல்-மந்திரி ரங்கசாமி தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
14 July 2022 12:42 AM IST

புதிய கட்டுமான பணிகளுக்கான தொடக்க விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

அதைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட உள்ள மாணவிகள் விடுதி கட்டிட விரிவாக்கம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு வளாகம், தியான்சந்த் உள்விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 6 திட்டங்களை தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்