< Back
புதுச்சேரி
நரம்பியல், மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம்
புதுச்சேரி

நரம்பியல், மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம்

தினத்தந்தி
|
11 Aug 2023 9:18 PM IST

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை) நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்