என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு
|காரைக்காலில் என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட என்.சி.சி. சார்பில் காரைக்காலை அடுத்த என்.ஐ.டி. வளாகத்தில் பயிற்சி முகாம் கடந்த 14-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
முகாமின் ஒரு பகுதியாக இன்று இந்திய அரசியல் சாசன சரத்துகள், அதன் வரலாறு, பொறுப்பும், கடமையும், இந்திய அரசியல் சாசனத்தின் வலிமையும் அதன் அடிப்படை மாறாத நெகிழ் தன்மை குறித்து சிறப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட என்.சி.சி. கர்னல் எல்.கே.ஜோஷி தலைமை தாங்கினார். தெற்கு ரெயில்வே மேற்பார்வை பொறியாளர் புஷ்பராஜ் கணினி உதவியுடன் இந்திய அரசியல் சாசனம் குறித்த வரலாற்றை திரையிட்டு விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் லெப்டினன்ட் டாக்டர் பாபு, முதல் நிலை அதிகாரி கேப்டன் காமராஜ், பெண்களுக்கான பயிற்றுனர், மகேஷ்வரி, ராணுவப் பயிற்றுனர்கள் மனோஜ், ஸ்ரீதரன், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.