< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புயல் எச்சரிக்கையை முன்னிட்டு காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒத்திகை
|8 Dec 2022 12:30 AM IST
மீட்பு பணிகள் குறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டருடன் பேரிடர் மீட்புக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்
காரைக்கால்,
காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டரை சந்தித்து, மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து மரம் வெட்டுவது குறித்தும், மீட்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும் பேரிடர் ஒத்திகையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.