< Back
புதுச்சேரி
மதுக்கடையை நரிக்குறவர்கள் மீண்டும் முற்றுகை
புதுச்சேரி

மதுக்கடையை நரிக்குறவர்கள் மீண்டும் முற்றுகை

தினத்தந்தி
|
7 Oct 2023 9:26 PM IST

வில்லியனூர் அருகே எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட மதுக்கடையை நரிக்குறவர்கள் மீண்டும் முற்றுகையிட்டனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே பட்டாணிக்கலம் பகுதியில் அரசு அமுதசுரபி சார்பில் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடியிருப்பு அதிகமுள்ள அந்த பகுதியில் மதுக்கடை திறக்க அங்கு வசிக்கும் நரிக்குறவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கடையை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்போதைக்கு மதுக்கடை திறக்கப்படுவது கைவிடப்பட்டது. இந்தநிலையில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் அமுதசுரபி ஊழியர்கள் மதுக்கடையை திறக்க வந்தனர். இதுகுறித்து அறிந்த நரிக்குறவ மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் நரிக்குறவ மக்களுடன் சேர்ந்து மதுக்கடையை மூடுமாறு அமுதசுரபி ஊழியர்களிடம் வலியுறுத்தினார். இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது. எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டதை கண்டித்து மீண்டும் மதுக்கடை முற்சூறுகையிடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்