நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீது வழக்கு
|மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போராட்டம்
புதுவை பெரிய மார்க்கெட்டை இடித்து கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் ஊர்வலமாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிறிது நேரத்துக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நாராயணசாமி மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி மற்றும் 10 பெண்கள் உள்பட 28 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.