< Back
புதுச்சேரி
பெண் ஊழியரிடம் செல்போன் திருடிய மர்ம ஆசாமி
புதுச்சேரி

பெண் ஊழியரிடம் செல்போன் திருடிய மர்ம ஆசாமி

தினத்தந்தி
|
15 Jun 2023 11:40 PM IST

புதுவையில் பெண் ஊழியரிடம் செல்போன் திருடிய மர்ம ஆசாமியை புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சவுமியா. சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது தனது செல்போனை மேஜையில் வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வாடிக்கையாளரை போல வந்து ஒரு விண்ணப்பம் கேட்டுள்ளார். அதனை எடுக்க அவர் அலுவலகத்தின் உள்ள சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது செல்போனை காணவில்லை. அங்கு நின்று கொண்டு இருந்த மர்ம நபரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது விண்ணப்பம் கேட்ட நபர் தான் செல்போனை திருடி செல்வது போல் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்