< Back
புதுச்சேரி

புதுச்சேரி
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

5 Sept 2023 9:56 PM IST
புதுவை பாகூரில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்
கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் குறவன்மேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி (வயது 28) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.