< Back
புதுச்சேரி
மோட்டார் சைக்கிள் திருடன் கைது
புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருடன் கைது

தினத்தந்தி
|
18 July 2023 11:24 PM IST

திருபுவனை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை

மடுகரை அருகே உள்ள தமிழக பகுதியான மோட்சகுளத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி காவலாளி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனையின் வாயிற்கதவு அருகே நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நைசாக யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் திருபுவனை போலீசார் மாநில எல்லையான மதகடிப்பட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவண்ணாமலை அருகே உள்ள நூக்கனூர் கிராமத்தைச சேர்ந்த ஜெயக்குமார் (44) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் திருடியதை ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்ததுடன் திருட்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்