< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மோட்டார் சைக்கிள் திருட்டு
|13 Oct 2023 10:48 PM IST
நோணாங்குப்பத்தில் வீடு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 29). இவர் கடந்த 11-ந் தேதி தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மர்மநபர் யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடுபோன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.