கொசு மருந்து அடிக்கும் பணி
|பாகூரில் ‘டெங்கு’ பாதித்த பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
பாகூர்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெரு, கன்னியகோயில் மணப்பட்டு சாலையில் உள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலர் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அப்பகுதியில் 13 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலைக்யில் டெங்கு பாதித்த பகுதிகளில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், நிலவேம்பு கசாயம் மற்றும் போதிய பாதுகாப்பும் வழங்க அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து இன்று துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், டெங்கு பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டதுடன் கருவி மூலம் புகை மருந்தும் அடித்தனர்.
தொடர்ந்து பலருக்கு காய்ச்சல் இருந்து வருவதால் இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.