< Back
புதுச்சேரி
புதுச்சேரி
அரசு பள்ளி மாணவர்களுடன் சாப்பிட்ட எம்.எல்.ஏ.
|24 July 2023 11:41 PM IST
திரு-பட்டினத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. மதிய உணவு சாப்பிட்டார்.
திரு-பட்டினம்
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு மதிய உணவில் தரம் இல்லை என புகார் கூறப்பட்டது.
இதையடுத்து எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்று அடிப்படை வசதிகள் உள்ளதா? போதுமான வகுப்பறைகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபடி அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். உணவின் தரத்தை உயர்த்தி மாணவர்களுக்கு சிறப்பாக வழங்குமாறு கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.