< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுவையில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு
|23 Aug 2023 11:25 PM IST
புதுவையில் மாயமான மாணவனை போலீசார் சென்னையில் மீட்டனர்.
புதுச்சேரி
புதுவை உறுவையாறு செல்வா நகரை சேர்ந்தவர் சிப்பிரியான். அவரது மகன் கார்த்திக் (வயது 14). இவர் நகரப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 21-ந் தேதி வழக்கம்போல் பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வந்தனர். அப்போது மாணவன் கார்த்திக் சென்னை சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சென்னை சென்று மாணவனை மீட்டு புதுச்சேரிக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.