அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மும்பை பயணம்
|மும்பையில் நடைபெறும் மாநாட்டில் புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
புதுச்சேரி
மும்பையில் நடைபெறும் மாநாட்டில் புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் மாநாடு
நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் டெல்லியில் அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிகளில் மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மும்பையில் மத்திய அரசின் நிறுவனமான மகராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மாநாடு நடக்கிறது. இதில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற 16, 17-ந்தேதிகளில் நடக்கிறது.
அமைச்சர்கள்
இதற்காக நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 500 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தவிர்த்து சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இதற்காக வருகிற 15-ந்தேதி மாலை அவர்கள் மும்பைக்கு புறப்பட்டு செல்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் 18-ந்தேதி பிற்பகல் மும்பையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார்கள்.