< Back
புதுச்சேரி
புதுச்சேரி
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்றனர்
|15 Jun 2023 11:54 PM IST
தேசிய மாநாட்டில் பங்கேற்க புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்றனர்
புதுச்சேரி
மும்பையில் தேசிய அளவிலான எம்.எல்.ஏ.க்கள் மாநாடு நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள புதுவை எம்.எல்.ஏ.க்களும் விருப்பம் தெரிவித்தனர். இதன்படி சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என 29 பேர் இன்று மும்பை சென்றனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக் குமார், எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், பி.ஆர்.சிவா ஆகியோர் மும்பை செல்லவில்லை. மும்பை சென்றுள்ளவர்கள் 2 நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாடு முடிந்ததும் மும்பையில் சில இடங்களை சுற்றி பார்க்கும் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி திரும்புகின்றனர்.