< Back
புதுச்சேரி
கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
புதுச்சேரி

கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

தினத்தந்தி
|
20 July 2023 11:34 PM IST

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, மாகி பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது மாகி தொகுதியில் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்