< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மீன்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை
|23 Jun 2023 10:15 PM IST
புதுவையில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி
மத்திய மந்திரி எல்.முருகன் வருகிற 29-ந்தேதி புதுச்சேரி வருகிறார். அப்போது புதுவை அரசு மீனவர்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளார். மேலும் கம்பன் கலையரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதுதொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் தெய்வசிகாமணி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது புதுவை அரசு மூலம் மீனவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், உதவிகள், இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி குறித்து ஆலோசிக்கப்பட்டது.